நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.   தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்க ள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை

ஜனநாயகத்தின் குரல் வளை நெரித்துக்கொண்டிருக்கிறது – மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் குரல் வளையை பாஜகவும் மத்திய உள்துறையும் நெரித்துக்கொண்டிருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆளும் கட்சியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதைதொடர்ந்து ஆகஸ்ட் 22ம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துவிட்டது உள்ளங்கை நெல்லிக்கனி போல உலகத்திற்கு தெரிய வந்துவிட்டது ஆனால் அது உள்கட்சிபிரச்சனை என்று கூறி இந்த

நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

அரசு அறிவிப்புக்கு எதிராக உத்தரவிட தலைமை நீதிபதி மறுப்பு: நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்ததால், நாளை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விபத்து எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. எனவே,

மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

நரேந்திர மோடி   –  PTI மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர் இணைந்துள்ளனர். இதில் 4 பேர் முன்னாள் அரசு அதிகாரிகள். இதர 5 பேர் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். புதிய அமைச்சர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியபோது, பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே புதிதாக 9 அமைச்சர்களைlத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். புதிய அமைச்சர்களின் விவரம் வருமாறு: அஸ்வினி குமார் சவுபே பிஹார்

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன ஏவுகணை தயாரிக்க முடிவு; ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன ஏவுகணை தயாரிக்க முடியாகி உள்ளது. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன ஏவுகணைகள் இந்திய விமானப் படை மற்றும் கப்பல் படையில் உள்ளன. ஆனால், ராணுவத்தில் அதுபோல் எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் இல்லை. எனவே, நீண்ட தூரம் சென்று எதிரி இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் வேண்டும் என்று