Category: News

நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

அரசு அறிவிப்புக்கு எதிராக உத்தரவிட தலைமை நீதிபதி மறுப்பு: நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்ததால், நாளை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. விபத்து எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. எனவே,

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன ஏவுகணை தயாரிக்க முடிவு; ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன ஏவுகணை தயாரிக்க முடியாகி உள்ளது. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன ஏவுகணைகள் இந்திய விமானப் படை மற்றும் கப்பல் படையில் உள்ளன. ஆனால், ராணுவத்தில் அதுபோல் எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் இல்லை. எனவே, நீண்ட தூரம் சென்று எதிரி இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் வேண்டும் என்று

பாராளுமன்றத்தில் நீண்ட அனுபவம் பெற்ற வெங்கையா நாயுடு உயர் பொறுப்புக்கு வந்து இருக்கிறார்: பிரதமர் மோடி

புதுடெல்லி, நாட்டின் 13-வது ஜனாதிபதியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட வெங்கையா நாயுடு, மாநிலங்களவையை இன்று நடத்தினார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள வெங்கையா நாயுடுவை புகழ்ந்து பிரதமர் மோடி இன்று அவையில் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு;- துணை ஜனாதிபதி சுதந்திரத்திற்கு பின்னர் பிறந்தவர். அவர் பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. விவசாயி மகன். ஏழைகள் பிரச்னைகளில் கவனம் செலுத்தியவர். மாநிலங்களவையின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர் வெங்கையா நாயுடு. மிகவும் கீழ்மட்டத்தில் இருந்து உயர்ந்துள்ள

நீட் தேர்வுக்கு விலக்கு கோரினேன்: பிரதமருடனான சந்திப்புக்குப் பின் முதல்வர் பழனிசாமி பேட்டி

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமர் மோடியிடம் மீண்டும் வலியுறுத்தி பேசியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பிரதமர் மோடியிடம் மீண்டும் வலியுறுத்தினேன்” என்றார்.

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் பாதுகாப்பு படைகள்: பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

எத்தகைய சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

மத்திய சிஆர்பிஎஃப் படை வரவழைப்பு தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை

தமிழக தலைமைச் செயலாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது மத்திய துணை ராணுவப் படையினர் வரும் தகவல் தமிழக அரசுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நகரத்துக்கு மத்திய துணை ராணுவப் படையின் வருகை குறித்து தமிழக பொதுச் செயலாளருக்கோ, காவல்துறை தலைவருக்கோ (டிஜிபி) எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) காலை, சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். காலை 6

கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் முன்னேறி வருவதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தின் கீழ், “திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் ஆன்டிபயாடிக் மருத்துவ சிகிச்சை முடிவு பெற்றவுடன் வீடு திரும்புவார்” என மருத்துவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், “கருணாநிதி உடல்நலம்

தமிழக தலைமை செயலர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள்

தமிழக தலைமை செயலர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறைக்கு வருமான வரித்துறையினர் சென்றுள்ளனர். தலைமைச் செயலகத்திலும் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள தலைமைச் செயலர் அலுவல் அறைக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக தலைமைச் செயலர் வருமான வரி சோதனைக்கு உட்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்ற

ஜம்மு காஷ்மீர் எல்லையில் 1,300 பேர் வெளியேற்றம்

ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி மாவட்ட, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் நேற்று முன் தினம் பாகிஸ்தான் படைகள் பல மணி நேரம் தாக்குதலில் ஈடு பட்டதை தொடர்ந்து, 1300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். நவ்ஷெரா பகுதியில் உள்ள கல்சியான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோட் டுக்கு மிக அருகில் உள்ள இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந் நிலையில் பாகிஸ்தான் படைகளின்

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், வி.பார்த்திபன் அடங்கிய 2-வது அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு