மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை

நரேந்திர மோடி   –  PTI

மத்திய அமைச்சரவையில் புதிதாக 9 பேர் இணைந்துள்ளனர். இதில் 4 பேர் முன்னாள் அரசு அதிகாரிகள். இதர 5 பேர் கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

புதிய அமைச்சர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியபோது, பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகே புதிதாக 9 அமைச்சர்களைlத் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புதிய அமைச்சர்களின் விவரம் வருமாறு:

அஸ்வினி குமார் சவுபே

பிஹார் பாஜக மூத்த தலைவர். அந்த மாநிலத்தின் முன்னாள் சுகாதார அமைச்சர். தற்போது புக்சர் மக்களவை தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவசர நிலை பிரகடனத்தின்போது ஜே.பி. இயக்கத்தில் மிக தீவிரமாக பணியாற்றியவர்.

வீரேந்திர குமார்

மத்திய பிரதேசத்தின் திகம்கார்க் மக்களவை தொகுதி உறுப்பினர். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் முன்னாள் ஒருங்கிணைப்பாளர். அவசரநிலை பிரகடனத்தின்போது 16 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் குழந்தை தொழிலாளர் குறித்து ஆராய்ச்சி செய்து பி.எச்டி பட்டமும் பெற்றுள்ளார்.

சிவபிரதாப் சுக்லா

உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வழக்கறிஞர், சமூக சேவகர் என பன்முகங்களை கொண்டவர். உத்தரபிரதேச பாஜக துணைத் தலைவர் உட்பட கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

அனந்த்குமார் ஹெக்டே

கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா தொகுதியிலிருந்து மக்களவைக்கு தொடர்ந்து 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.

சத்ய பால் சிங்

உத்தரபிரதேசத்தின் பாக்பாத் மக்களவை தொகுதி உறுப்பினர். மகாராஷ்டிர மாநில முன்னாள்

ஐ.பி.எஸ். அதிகாரி. நக்ஸல் தீவிரவாதிகளை ஒடுக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.

கஜேந்திர சிங் ஷெகாவத்

ராஜஸ்தானின் ஜோத்பூர் மக்களவை தொகுதி உறுப்பினர். பாஜக விவசாயிகள் அணியின் தேசிய பொதுச்செயலாளர். விளையாட்டு ஆர்வலர். அகில இந்திய விளையாட்டு கவுன்சில், இந்திய கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.

ஹர்தீப் சிங் புரி

இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி. ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் உட்பட பல்வேறு நாடுகளில் தூதராகப் பணியாற்றி உள்ளார்.

ராஜ்குமார் சிங்

மத்திய உள்துறை முன்னாள் செயலாளர். தற்போது பிஹார் மாநிலத்தின் அரா மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார்.

அல்போன்ஸ்

கேரளவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்வியறிவு இயக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவற்றில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மக்கள் பாராட்டை பெற்றவர். வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார்.

(Visited 29 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *