கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் அதிரடி ஆய்வு! நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை கள்குறித்துகேட்டறிந்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

  1. கலசபாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களும் செவிலியர்களும்அலட்சியம்காட்டுவதாகவும்,மருத்துவமனையை சுற்றிலும் சுகாதார சீர்கேடு உள்ளதாகவும் வந்த புகார்களை அடுத்து கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் அதிரடி ஆய்வில் இறங்கினார் கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற எம்எல்ஏ மழைநீர் தேங்கி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் உடனடியாக மருத்துவர்களை அழைத்து நுழைவுவாயிலிலேமழைநீர்தேங்கியிருந்தால் கொசுக்கள்உற்பத்தியாகாதா ?இங்கு வரும் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை உங்களால் அளிக்க முடியும் உடனடியாக இதைஅப்புறப்படுத்துங்கள் என்று கூறினார் மேலும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை சுற்றிலும் மின்மாற்றி கம்பிகள் உள்ளதை கண்ட பன்னீர்செல்வம் உடனடியாக மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு மின்மாற்றி களைசரிசெய்யுங்கள் மழை நீரிலிருந்து அப்புறப்படுத்துங்கள் என உத்தரவிட்டார் மேலும் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளதா என கேட்டறிந்தார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டநோயாளிகள் எவ்வளவு பேர் வந்தனர் எந்தவகையான சிகிச்சைகள் அளிக்க பட்டது நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறதா? என்ற விவரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் இதைத் தொடர்ந்து ஆதமங்கலம் அரசுஆரம்பசுகாதாரநிலையத்துக்குசென்றுஆய்வுசெய்தார் செவிலியர்குடியிருப்பைசுற்றிலும்மழைநீர்தேங்கியிருப்பதைகண்ட எம்எல்ஏ துப்புரவு பணியாளர்களை அழைத்து மழைநீரை அகற்ற கூறினார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை,நிலவேம்பு கசாயம் வழங்கப்படவேண்டுமெனசெவிலியர்களிடம் கேட்டுக் கொண்டார் மேலும் சிகிச்சை க்கு வரும் நோயாளிகளிடம்மனிதநேயத்துடன் நடக்கவேண்டுமெனகேட்டுக்கொண்டார் உடன் மாவட்ட கழக துணை செயலாளர் எல் என் துரை ஒ செ எம் திருநாவுக்கரசு பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் பலர்
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *