“தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது “- மு.க.ஸ்டாலின்

சென்னை தமிழகம் டெங்கு மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் தமிழகம் முழுவதும் டெங்கு மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது மக்களைப் பற்றி அரசுக்கு கவலை இல்லை என்றும் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு சென்றார் அங்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களைசந்தித்து நலம் விசாரித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “டெங்கு காய்ச்சலினால் நூற்றுக்கணக்கானோர்இறந்துகொண்டிருக்கும் சூழலில் இதைப்பற்றி யெல்லாம் ஆளும் கட்சி கவலைபடாமல் ஆடம்பரமான கட்அவுட் கள்வைத்துவிழாக்கள் கொண்டாடும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என்ற தவறான தகவலையும் பரப்பிவருகின்றனர் இதுகண்டிக்கதக்கது ” என்றார்
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *