பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வலிமையாகி உள்ளது ராஜ்நாத் சிங்

பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வலிமையாகி உள்ளது ராஜ்நாத் சிங்
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியாவின் எல்லையானது இப்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியா இனியும் பலவீனமாக இருக்காது என்பதை சீனாவும் புரிந்துக் கொண்டது. இந்தியாவின் வலிமையானது உயர்ந்துவிட்டது என சீனாவிற்கு தெரியும். மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்னர் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடாகி உள்ளது, இந்தியாவின் பெருமையானது சர்வதேச அளவில் உயர்ந்து உள்ளது என்றார்.
இந்தியாவிற்குள் பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை அனுப்பி வருகிறது எனவும் ராஜ்நாத் சின் குற்றம் சாட்டினார்.
இந்தியாவை உடைக்க பாகிஸ்தான் முயற்சி செய்கிறது, இந்திய பாதுகாப்பு படைகள் தினமும் இரண்டு, நான்கு பயங்கரவாதிகளை கொல்கிறது என்றார்.
(Visited 9 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *