மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு உதவ தயாராகுங்கள் திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை மழை காலத்தில் பொது மக்களுக்கு உதவ தயாராகுங்கள் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை யைஎதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் “விழா கொண்டாட்டத்தில்” இருக்கும் தமிழக அரசு எடுப்பதாக தெரியவில்லை டெங்கு உற்பத்தி செய்யும் கொசுக்கள் ஒழிப்பு என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் மருத்துவமனைகள் வீடுகளுக்கு அபராதம் விதித்து டெங்கு பாதிப்பை திசை திருப்பும் பணிகளில் தீவிரம்காட்டும் அரசு மழைநீர் வடிகால்வாய்களைசீரமைக்கும் பணிகளிலோதூர்வாரும்பணிகளிலோஈடுபடவில்லை 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பேரழிவுக்குஉள்ளாக்கியபெருவெள்ளத்திலிருந்து இந்த அரசு இன்னும் எவ்வித பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை அதேநேரத்தில் பொறுப்பு ள்ள எதிர்கட்சியாக இருக்கும் திமுக சென்னை பெருவெள்ளத்தின்போதும் வர்தா புயல்நேரத்திலும் ஆற்றிய பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள் இப்போதும்கூடமாநிலம்முழுவதிலும் நீர்நிலைகளைதூர்வாரும் பணிகளில் கழக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகிறார்கள் நானும் நேரில் சென்று பார்வையிட்டுவருகிறேன் இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது
(Visited 7 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *