போளூர் ஆசிரியர் தின விழா 1 லட்சம் நிதி பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார்

வந்தவாசி : போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா வில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு ₹ 1 லட்சம் தனது சொந்த நிதியாக வழங்கி ஆசிரியர்களை பாராட்டி பேசினார் ” நான் எம்எல்ஏ என்பதை விட இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்று சொல்லி கொள்வதில் பெருமையடைகிறேன் அவ்வகையில் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளேன் கடமைப்பட்டுள்ளேன் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் பொது தேர்வில் முதல் இரண்டு இடம் பிடிப்பவர்களுக்கு தங்க செயின் வழங்கப்படும் அதேபோல் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி பரிசு கள் வழங்கப்படும் ” என்றார்
(Visited 8 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *