மீனவர்கள் மாயமான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவில்லை – டி டி வி தினகரன்

சென்னை: குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை என டிடிவி தினகரன் கூறினார் குமரி மாவட்டத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டிடிவி தினகரன் பார்வையிட்டார் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியமுறையில் நிவாரண உதவி கள்கிடைக்கவில்லை,பணிகள் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிகிறது இந்த அரசு ஆடம்பர விழா கொண்டாட்டத்தில் தான் இருக்கிறது முதலமைச்சர்களும் அமைச்சர் களும் அதில்தான் ஆர்வமாக உள்ளனர் மீனவர்கள் மாயமான விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவில்லை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உடைஇருப்பிட வசதிகளை இந்த அரசு செய்யவில்லை போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக சந்தித்து நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார் உடன் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்
(Visited 5 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *