அம்மா மக்கள் குறை கேட்கும் முகாம் பன்னீர்செல்வம் எம்எல்ஏ மனுக்களை பெற்றார்

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அம்மா மக்கள் குறை கேட்கும் முகாம் நடைப்பெற்று வருகிறது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறார் அனந்தபுரம் காளசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் முகாம் நடைபெற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜமுனாமரத்துர்ஆகிய ஊராட்சிகளில் பன்னீர்செல்வம் எம்எல்ஏ பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்தந்த துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்தார் மேலும் அனந்தபுரம் கைலாசபாறைதிரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் கோரிக்கை மனுக்களை பெற்றார் படவேடு கண்ணமங்கலம் சாலை 72 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது காளசமுத்திரம் பள்ளக்கொல்லை சாலை உலக வங்கி உதவியுடன் சீரமைக்கப்படும் என்றார் குப்பம் ஊராட்சியில் சமுதாய கூடம் கட்ட 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது நின்றுபோன முதியோர் உதவி தொகை கிடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி ஆவனசெய்யப்படும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதிய தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்ட ஏற்பாடுசெய்யப்படும் என பன்னீர்செல்வம் எம்எல்ஏ கூறினார் உடன் மு எம்எல்ஏ நளினி மனோகரன் மாவட்ட கழக துணைச் செயலாளர் எல் என் துரை மற்றும் பலர் உடனிருந்தனர்
(Visited 2 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *