பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது

சென்னை : தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தற்போது நடைபெற்று வருகிறது ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியது இதைக் கண்டித்து எதிர்கட்சிகள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 29 ந்தேதி சிறைநிரப்பும் போராட்டம் நடத்தியது ஏதோ ஒப்புக்காக சிறிது கட்டணத்தை அரசு குறைத்தது இதுபோதாது கட்டணம் பழைய நிலைக்கே வரவேண்டும் என எதிர்கட்சிகள் கூறிவருகின்றன இதுசம்பந்தமாக அடுத்த கட்ட போராட்டத்திற்க்கானஆலோசனைகூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது 12 வருடத்திற்கு பிறகு வைகோ இக்கூட்டத்தில் கலந்துகொண்டார் மற்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் முத்தரசன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்
(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *