நாகூர் தர்கா ஷரீப் 461-ம்ஆண்டு பெரிய கந்தூரி மகோற்சவ விழா பிப்-17 புனித கொடியேற்றம் பிப்-26 சந்தனகூடு விழா ஏற்பாடுகளை சிறப்பு அலுவலர்கள் அக்பர் அலாவூதீன் செய்து வருகின்றனர்

வந்தவாசி: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா ஷரீப் அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் திருத்தலமாகும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்திருத்தலத்தின் 461-ம்ஆண்டு பெரிய கந்தூரி மகோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது வரும் பிப்ரவரி 17 ந்தேதிகொடியேற்றமும் பிப் 26 சந்தனகூடு ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் ரவுலாஷரீபுக்கு சந்தனம் பூசுதல் நடைபெறும் மதங்களை கடந்து மனித மனங்களில் நிறைந்து வாழும் ஹஜ்ரத் செய்யதினா ஷாஹுல்ஹமீது காதீர் வலி கஞ்சஸவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாகூர் ஆண்டகை அவர்களின் பெரிய கந்தூரி மகோற்சவத்திற்க்குஉலகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த வருடம் சென்னை உயர்நீதிமன்றத்தால்நியமனம் செய்யப்பட்டுள்ள அல்ஹாஜ் எஸ் எப் அக்பர் (மு)மாவட்ட நீதிபதி அல்ஹாஜ் கே அலாவூதீன் ஐ ஏ எஸ் (ஓய்வு ) அவர்களின் சீரிய மேற்ப்பார்வையில், திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு குடிநீர் வசதி தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன மேலும் தர்கா குளம் சுத்தம் செய்யப்பட்டு சுற்றுபுர சுகாதாரங்களை பேண நாகை நகராட்சி க்குஅறிவுருத்தப்பட்டுள்ளது பரம்பரை டிரஸ்டிகளின் ஆலோசனைகளையும்பெற்று அனைத்து முன்னேற்பாடுகளையும் சுழன்று சுழன்று செய்து வருகிறார் சிறப்பு அலுவலர்கேஅலாவூதீன் பின்ன என்ன நாகூருக்கு குடும்பத்தோடு கிளம்பிட வேண்டியது தானே!
(Visited 9 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *