உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர் நீதிமன்றம்

highcourt_jpg_1610499f

தமிழக உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், வி.பார்த்திபன் அடங்கிய 2-வது அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி முறையிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முந்தைய உத்தரவு:

‘உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப் படவில்லை. எனவே, உரிய இடஒதுக்கீடு முறைகளை இந்தத் தேர்தலில் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த இடஒதுக் கீடு ஆணைகளை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’ என கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில், “உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பாணை உரிய விதிமுறைகளை பின்பற்றி முறை யாக வெளியிடப்படவில்லை. எனவே, தேர்தல் தேதி (அக்டோபர் 17, 19) தொடர்பான அறிவிப் பாணை ரத்து செய்யப்படுகிறது. புதிதாக தேர்தல் அறிவிப்பா ணையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்பு களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்து, பரிசீலனை நடந்துவந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தேர்தல் தொடர்பான பணிகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சித் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. அதன்படி, தமிழக உள்ளாட்சித் தேர்தலை வரும் 24-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

(Visited 4 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *