ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க தடை

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து, வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் 2வது நாளாக தடை விதித்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜாசாகர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கர்நாடகாவின் கபினி அணை உபரிநீரால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து, சினிபால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையடுத்து, காவிரியாற்றில், பரிசல் இயக்கவும், குளிக்கவும், மாவட்ட நிர்வாகம் 2வது நாளாக தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *